நாமக்கல்லில் கடந்த சில மாதங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு பலத்த இடி, சூறைக்காற்றுடன் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்தக் கோடை மழை நேற்று இரவு முதல் இன்று காலை வரை தொடர்ந்து நீடித்தது. இதனால் நாமக்கல் பரமத்தியில் காவிரி நீர் வரத்து வரத் தொடங்கியது.
நாமக்கல்லில் பலத்த சூறைக்காற்று - வாழை மரங்கள் சேதம்
நாமக்கல்: பரமத்தியில் பலத்த சூறைக்காற்று வீசியதால் பல்லாயிரக்கணக்கான வாழை மரங்கள் வீழ்ந்து சேதமடைந்தன.
வாழைமரங்கள்
பலத்த சூறைக்காற்றுடன் பெய்த மழையால் பரமத்தி நன்செய் இடையாறு என்னும் கிராமத்தில் பல்லாயிரக்கணக்கான வாழை மரங்கள் முற்றிலும் சாய்ந்தன. இதன் காரணமாக வாழை பயிரிட்ட விவசாயிகள் கவலை அடைந்தனர். மேலும் அரசு, சேதமடைந்த வாழைகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.