தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பரமத்தியில் வாழைத்தார் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ. 450 வரை விற்பனையானது. ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400–க்கும், தேன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.350–க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ350–க்கும் ஏலம் போனது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.4 முதல் ரூ.5 வரை விற்பனையானது.

farmers feeling happy
farmers feeling happy

By

Published : Jan 12, 2021, 9:07 PM IST

நாமக்கல்: பரமத்திவேலூரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழைத்தார் சந்தையில் வாழைத்தாரின் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளதால், இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளா,கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.

மேலும், பரமத்திவேலூர் மட்டுமின்றி சுற்றுவட்டார விவசாயிகள் வாழைத்தார் சந்தைக்கு தங்களது வாழைத்தார்களை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்வது பரமத்திவேலூர் வாழைசந்தையின் சிறப்பம்சம் ஆகும்.

இன்று நடைபெற்ற ஏலத்திற்கு ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ. 450 வரை விற்பனையானது. ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400–க்கும், தேன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.350–க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ350–க்கும் ஏலம் போனது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.4 முதல் ரூ.5 வரை விற்பனையானது.

இதுகுறித்து வாழை விவசாயி கூறுகையில், சென்ற வாரத்தை ஒப்பிடுகையில் இன்று நடைபெற்ற ஏலத்தில் விலை அதிகரித்துள்ளது. பொங்கல் பண்டிகை நெருங்கிக்கொண்டிருப்பதால் வாழைத்தார்களின் விலை உயர்ந்து வருகிறது. இனிவரும் காலங்களில் இன்னும் விலை உயர்வு ஏற்படும் என எதிர்பார்க்கிறோம். விவசாயிகள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளோம் என்றார்.

ABOUT THE AUTHOR

...view details