நாகப்பட்டினம் மாவட்டத்தில் பொது சுகாதாரத் துறை சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும், தீவிர வயிற்றுப்போக்கு தடுப்புக்கான இரு வார விழிப்புணர்வு முகாமை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் தேமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று தொடங்கிவைத்தார்.
குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைக்க நாகையில் விழிப்புணர்வு முகாம்! - விழிப்புணர்வு முகாம்
நாகை: வயிற்றுப்போக்கால் ஏற்படும் குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைப்பதற்காக நாகப்பட்டினத்தில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
விழிப்புணர்வு முகாம்
அப்போது பேசிய அவர் "குழந்தைகளின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு இந்த விழிப்புணர்வு பரப்புரைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இதன் வாயிலாக பெற்றோருக்கு சில புரிதல்கள் ஏற்படும்" என தெரிவித்தார்.