தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மது விலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ரூ.16 லட்சத்திற்கு ஏலம் - வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஏலம்

நாமக்கல்: மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் இன்று (பிப்.10) பொது ஏலத்தில் விடப்பட்டன.

vehicles
வாகனங்கள்

By

Published : Feb 10, 2021, 9:46 PM IST

நாமக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் இன்று (பிப்.10) பொது ஏலத்தில் விடப்பட்டன. நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற இந்த ஏலத்தை கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ராமு தொடங்கி வைத்தார்.

நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் ஏலம்

இதில் 58 இருசக்கர வாகனங்களும், ஐந்து நான்கு சக்கர வாகனங்களும் ஏலம் விடப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்டோர் இதில் கலந்துகொண்டு தாங்கள் விரும்பிய வாகனங்களைத் தேர்வு செய்தனர். காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெற்ற ஏலத்தில் அனைத்து வாகனங்களையும் விடுவித்த வகையில், 16 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் பெறப்பட்டது. வாகனத்தை ஏலம் எடுத்தவுடன் அப்போதே ஏலத்தொகை மற்றும் சேவை வரியை செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொண்டனர்.

இதையும் படிங்க:பிரதமர் மற்றும் ஆளுநர் பெயரை பயன்படுத்தி பல கோடி ரூபாய் மோசடி

ABOUT THE AUTHOR

...view details