தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மீது தாக்குதல்: போதை ஆசாமிகளுக்கு வலைவீச்சு - namakkal district news

நாமக்கல்: முத்துகாப்பட்டியில் பெட்ரோல் பங்க் ஊழியர்களை மதுபோதையில் தாக்கிய நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மீது தாக்குதல்
பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மீது தாக்குதல்

By

Published : Nov 28, 2020, 12:18 PM IST

நாமக்கல் மாவட்டம் முத்துகாப்பட்டியில் சரவணன் என்பவருக்கு சொந்தமான இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் உள்ளது. இந்தப் பங்கிற்கு இருசக்கர வாகனத்தில் வந்த மேதரமாதேவியைச் சேர்ந்த அய்யாசாமி என்பவர் 50 ரூபாய் கொடுத்து பெட்ரோல் நிரப்புமாறு கூறினார்.

எவ்வளவு ரூபாய்க்கு என ஊழியர் திரும்பக் கேட்டுள்ளார். அதற்கு அய்யாசாமி ஒரு முறை சொன்னால் காது கேட்காதா எனக் கூறி ஊழியரை தகாத வார்த்தையால் திட்டினார்.

பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மீது தாக்குதல்

பின்னர் மதுபோதையில் அய்யாசாமி தனது நண்பர்களான சரத், ரஞ்சித், ராமசந்திரன் ஆகியோரை அழைத்து வந்து பங்கில் இருந்த மண் வாலியை எடுத்து ஊழியர்களை தாக்கினார்.

பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மீது தாக்குதல்

இவை அனைத்தும் பங்கில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியது. உடனே பங்க் ஊழியர்கள் சேந்தமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மீது தாக்குதல்

இந்த சம்பவம் தொடர்பாக அய்யாசாமி, அவரது நண்பர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மீது தாக்குதல்

இதையும் படிங்க: புதுச்சேரியில் முன்விரோதம் காரணமாக பெட்ரோல் பங்க் சூறையாடல்

ABOUT THE AUTHOR

...view details