தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிலம்ப கலை குறித்து விழிப்புணர்வு: ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி மாணவர்கள் சாதனை! - ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி மாணவர்கள் சாதனை

சிலம்ப கலை குறித்து மாணவ மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் தொடர்ந்து ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர்.

சிலம்பகலை குறித்து விழிப்புணர்வு
சிலம்பகலை குறித்து விழிப்புணர்வு

By

Published : Jan 27, 2021, 5:19 AM IST

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் முத்துகாபட்டியில், 72 ஆவது குடியரசு தின விழா, பராக்ரம தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகள் தொடர்ந்து ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நாமக்கல் பாரதமாதா சிலம்பம் பயிற்சி மன்றம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். பாரம்பரிய சிலம்ப கலையை மீட்டெடுக்கும் விதமாக பள்ளி மாணவ-மாணவிகள் தொடர்ந்து ஒரு மணிநேரம் சிலம்பம் சுற்றினர். மாணவர்களின் தனித்திறமை வெளிப்படும் வகையில், அலங்கார சுற்று, நெடுக்கம்பு சுற்று, தலைவாறல் சுற்று என 3 பிரிவுகளில் மாணவ மாணவிகள் 20 சுற்றுகளாக ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றினர்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கி பாராட்டப்பட்டனர்.

இதையும் படிங்க:டிராக்டரில் சென்று திருமணம் செய்த பொறியாளர்!

ABOUT THE AUTHOR

...view details