நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சார்-பதிவாளர் அலுவலகத்தில் நேற்று (நவ.27) மாலை லஞ்ச ஒழிப்புத் துறை துணை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையிலான 10க்கும் மேற்பட்ட காவல் துறையினர் சோதனை நடத்தினர்.
அப்போது பொறுப்பு சார்-பதிவாளர் மாலதி பணியில் இருந்தார். அவரிடமும் அலுவலக ஊழியர்களிடமும் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் விசாரணை செய்தனர்.
சார்-பதிவாளர் அலுவலகத்தில் சோதனை விடிய விடிய நடைபெற்ற சோதனையானது இன்று (நவ.27) காலை நிறைவு பெற்றது. இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ. 7 லட்சத்து 17 ஆயிரம் கைப்பற்றப்பட்டது.
மேலும் இதுதொடர்பாக பொறுப்பு சார்-பதிவாளர் மாலதி, அலுவலக ஊழியர்கள் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: 20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளர் கைது!