தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் ஆந்திர எம்பி சாமி தரிசனம் - நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில்

ஆந்திர மாநில மாநிலங்களவை உறுப்பினரும், போக்குவரத்து மற்றும் சுற்றுலா - கலாசார நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவருமான டி.ஜி. வெங்கடேஷ் புகழ்பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சாமி தரிசனம்செய்தார்.

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில்
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில்

By

Published : Dec 14, 2021, 3:14 PM IST

நாமக்கல்:ஆஞ்சநேயர் திருக்கோயிலில் வழிபாடு செய்வதற்காக, மாநிலங்களவை உறுப்பினரும், போக்குவரத்து மற்றும் சுற்றுலா - கலாசார நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவருமான டி.ஜி. வெங்கடேஷ் இன்று (டிசம்பர் 14) நாமக்கல் வந்தார். அங்கு அவர் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம்செய்தார். அதைத் தொடர்ந்து குடைவரைக் கோயிலான நரசிம்ம சுவாமி கோயிலிலும் வழிபட்டார்.

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் ஆந்திர எம்பி சாமி தரிசனம்

முன்னதாக நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் வளாகத்தில் செய்தியாளரிடம் பேசிய அவர், "நாமக்கல்லில் உள்ள பிரசித்திப் பெற்ற ஆஞ்சநேயர், நரசிம்மர் திருக்கோயில்கள் புராதன, ராமாயண கால சிறப்பு வாய்ந்தவையாகும்.

பக்தர்கள் எளிதில் கோயில்களில் வழிபட நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. நாடு முழுவதும் கோயில்களில் பக்தர்கள் எவ்வித சிரமமுமின்றி வழிபட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கலாசார, புராதன சிறப்புமிக்க இடங்களை மேம்படுத்திவருகிறது. நமது நாட்டின் சிறப்புமிக்க ஆன்மிக, கலாசார பெருமைகளை இன்றைய இளைஞர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். நமது நாட்டின் பெருமைகளை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்.

மதச்சார்பற்ற நமது நாட்டில், அனைத்துத் தரப்பு மக்களும் தங்களது சொந்த கலாசாரத்தைப் பின்பற்றி வாழ்வதற்கான உரிமை உள்ளது. பெரும்பான்மை, சிறுபான்மையின மக்கள் என அனைவருக்கும் அதற்கான உரிமை உள்ளது" எனத் தெரிவித்தார்.

ஆந்திர எம்பி சாமி தரிசனம்

இதையும் படிங்க: ரூ.53.23 லட்சம் மதிப்பில் வேளாண் துறைக்குப் புதிய கார்கள்

ABOUT THE AUTHOR

...view details