தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’இவர் மூலம்தான் எடப்பாடி எனக்கு தூது விட்டார்’ - அமமுக பழனியப்பன் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

நாமக்கல்: அதிமுகவில் சேரும்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொழிலதிபதிபர் ஒருவர் மூலம் தனக்கு தூது விட்டதாக அமமுகவின் துணை பொதுச் செயலாளர் பழனியப்பன் கூறியுள்ளார்.

ammk deputy general secretary palaniappan press meet

By

Published : Nov 14, 2019, 11:23 PM IST

அமமுகவின் நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் பழனியப்பன், ”அதிமுகவில் சேர நான் யாரையும் தூது விடவில்லை. ஆனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான், தொழிலதிபர் அன்பழகன் என்பவர் மூலம் என்னை அதிமுகவில் சேர தூதுவிட்டார்.

அமமுக பழனியப்பன் பேட்டி

ஆனால் முதலமைச்சரின் தூதுக்கு நான் செவி சாய்க்காததால் ஆத்திரமடைந்த அவர், ஆணவத்தின் உச்சத்தில் பேசுகிறார். நான் தூது விட்டிருந்தால் அதற்கான ஆதாரத்தை அவர் வெளியிட வேண்டும்.

அமமுகவிலிருந்து புகழேந்தி ஆதாயத்திற்காகவும், சுய நலத்திற்காகவும் கட்சி மாறி செல்கிறார். உள்ளாட்சித் தேர்தலில் அமமுக போட்டியிடுவது குறித்து கழக பொதுச் செயலாளர் முடிவெடுப்பார்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details