நாமக்கல் பூங்கா சாலையில் தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் நேற்று (செப்.22)கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
108 அவசர ஊர்தி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - நாமக்கல் பூங்கா சாலை ஆர்ப்பாட்டம்
நாமக்கல் : முதலமைச்சர் அறிவித்த ஐந்தாயிரம் ரூபாய்க்கான அரசாணையை வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் 100க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் ”2019-20ஆம் ஆண்டிற்கான ஊதிய உயர்வை உடனடியாக வழங்கிட வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த ஊக்கத் தொகையான ஐந்தாயிரம் ரூபாய்க்கான அரசாணையை வெளியிட வேண்டும், ஓராண்டிற்கு மேல் பணிபுரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும், வேலை நேரத்தை எட்டு மணி நேரமாகக் குறைக்க வேண்டும், கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 50 லட்சம் ரூபாய்க்கான காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்” என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்டோர் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க :காவிரி ஆற்றுப் பகுதிகளில் தேசிய பசுமைத் தீர்ப்பாய உறுப்பினர்கள் ஆய்வு