நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த பொத்தனூரில் செயல்பட்டு வரும் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில், உள்ள சுற்றுச்சுவர் சேதம் அடைந்த நிலையில் பள்ளி நேரத்தில் கால் நடைகள் புகுந்ததால் மாணவர்கள் அச்சம் அடைந்தனர்.
இதையறிந்த முன்னாள் மாணவர்கள் சிலர், சுற்றுச்சுவரைச் சீரமைத்து பல்வேறு வண்ணங்கள் சுவற்றில் அடித்தனர். மேலும் பள்ளி தேசிய பசுமைப்படை மாணவ - மாணவிகளுடன், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள், ஊர்த் தலைவர்கள் இணைந்து பள்ளி வளாகம் மற்றும் பள்ளி சாலைகளில் 520 மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
அரசுப் பள்ளி வளாகத்தில் 520 மரக்கன்றுகளை நட்ட முன்னாள் மாணவர்கள்..! - அரசுப் பள்ளி வளாகத்தில் 520 மரக்கன்றுகளை நட்ட முன்னாள் மாணவர்கள்
நாமக்கல்: பரமத்தி வேலூர் அருகே அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சார்பில் பள்ளி வளாகத்தில் 520 மரக்கன்றுகளை நட்டுவைத்தனர்.
மரக்கன்றுகளை நட்ட முன்னாள் மாணவர்கள்
இதையும் படிங்க: இயற்கையை மீட்கும் நோக்கில் விதைப்பந்துகளை உருவாக்கிய மாணவர்கள்!