நாமக்கல் மக்களவைத் தொகுதியில் கொங்குநாடு மக்கள் கட்சி வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜ் வெற்றி பெற்றார். இதனையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
ஆட்சியாளர்களுக்கு எதிரான வாக்களிப்பே எங்கள் வெற்றி - ஏ.கே.பி.சின்ராஜ் - ஏ.கே.பி.சின்ராஜ்
நாமக்கல்: தமிழ்நாடு மக்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள் என்பதையே இந்த வெற்றி காண்பிக்கிறது என நாமக்கல்லில் வென்ற கொங்குநாடு மக்கள் கட்சி வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜ் கூறியுள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது, தேர்தலில் என்னை வெற்றி பெற செய்த நாமக்கல் மக்களுக்கு மனமார்ந்த நன்றிகள் தெரிவித்து கொள்கிறேன். இந்த வெற்றி தமிழ்நாடு மக்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள் என்பதை காட்டுகிறது. வெற்றி பெறவைத்த கூட்டணியில் இருக்கும் அனைத்துக் கட்சி பொறுப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
மேலும் திமுக கூட்டணி தமிழகம் முழுவதும் பெற்றுள்ள வெற்றிக்கு திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துகள் கூறியுள்ளோம். அதே போல் சூலூர் இடைதேர்தலில் திமுக தோல்வி அடைந்ததை பற்றி குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ள உள்ளது” என்றார்.