தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு ஏஐடியுசி ஆர்ப்பாட்டம் - கரோனா நிவாரண நிதி

நாமக்கல்: கரோனா நிவாரண நிதி உடனடியாக வழங்கவேண்டும் என தமிழ்நாடு ஏஐடியுசி தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

AITUC protest
AITUC protest

By

Published : Jun 16, 2020, 1:08 AM IST

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு தமிழ்நாடு ஏஐடியுசி தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரோனா தொற்று நிவாரண நிதி உடனடியாக வழங்கவேண்டும், ஓய்வூதியம் பெறுவோர்களுக்கு 10 மாதமாக வழங்கப்படாமல் உள்ள ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு புதுப்பித்தல் செய்து தர வேண்டும், 2020ஆம் ஆண்டுக்கான ஆயுள்சான்றை ரத்து செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் மாவட்டத்தில் நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு ஒருசிலருக்கு மட்டுமே தமிழ்நாடு அரசின் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. இது அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் அவர்கள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details