தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சசிகலா, தினகரன் தவிர யார் வந்தாலும் அதிமுக ஏற்றுக்கொள்ளும்! - ADMK accepts everyone who comes

நாமக்கல்: சசிகலா, தினகரன் தவிர்த்து மற்ற யார் வந்தாலும் அதிமுகவில் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

AIADMK will accept anyone who comes except Sasikala and Dinakaran

By

Published : Oct 30, 2019, 7:25 PM IST

நாமக்கல்லில் இன்று தென்னிந்திய எல்.பி.ஜி.டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் தென்னிந்திய எல்.பி.ஜி.டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவராக நடராஜனும், செயலாளராக மோகனும் பொருளாளராக அம்மையப்பனும் பதவியேற்றனர். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்துகொண்டார்.

எல்.பி.ஜி.டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்புவிழா

இதில் அமைச்சர் தங்கமணி பேசுகையில், நாமக்கல் மாவட்டம் அனைத்து தொழிலுக்கும் பெயர்போனது. அதற்கு காரணம் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மக்களின் உழைப்பே காரணம். தொழிலில் தரமும், நம்பிக்கையும், நாணயமும் இருந்தால் நிச்சயமாக வெற்றிபெற முடியும். லாரி தொழிலில் உள்ள பிரிச்னைகளை விரைவில் சம்மந்தப்பட்ட அமைச்சர்களிடம் கொண்டு சேர்த்து தீர்வுகாணப்படும். நாமக்கல் மாவட்டத்தில் இன்னும் மூன்று மாதங்களில் மருத்துவக் கல்லூரிக்கான கட்டடப்பணிகள் தொடங்கப்பட்டு, மூன்று ஆண்டுகளுக்குள் கல்லூரி செயல்படும் என்றார்.

அமைச்சர் தங்கமணி பேச்சு

தொடர்ந்து பேசுகையில், ''அதிமுகவில் தினகரன், சசிகலா தவிர வேறு யார் வந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள். கன்னியாகுமரியில் மின்சாரம் தாக்கி மூவர் இறந்த சம்பவம் மிகவும் துயரமானது எனவும் வீடுகளில் மின்சாரம் பழுது ஏற்பட்டால் மக்கள் தாங்களாகவே சரிசெய்யாமல் அருகில் உள்ள மின்வாரியத்துக்கு தகவல் தெரிவித்து சரிசெய்ய வேண்டும். தமிழ்நாட்டில் பிரீப்பெய்டு மின்மீட்டர் வைக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது'' என்றார்.

அமைச்சர் தங்கமணி செய்தியாளர் சந்திப்பு

இதையும் படிங்க: அது கிடைக்கும்வரை தேர்தலில் போட்டியில்லையாம்...! - சொல்கிறார் டிடிவி தினகரன்

ABOUT THE AUTHOR

...view details