தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒரே படகில் பாஜக- அதிமுக கூட்டணி; பாஜக தலைவர் அண்ணாமலை - தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி

கூட்டணியிலிருந்து யார் விலகினாலும் பாஜக-அதிமுக கூட்டணி தொடரும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

BJP state president Annamalai
BJP state president Annamalai

By

Published : Dec 16, 2021, 7:12 PM IST

நாமக்கல்: இயற்கை வேளாண்மை குறித்த கருத்தரங்கு இன்று நாமக்கல்லில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துக்கொண்டு உரையாற்றினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து திமுக எந்த புதிய திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.

மத்திய அரசின் திட்டத்தை காப்பியடித்து செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீராகயில்லை. இதற்கு தினசரி நடைபெறும் கொலை சம்பவங்களே எடுத்துக்காட்டு. கோமாரி நோய் தடுப்பூசிகளை மாநில அரசுக்கு மத்திய அரசு வழங்கவில்லை என்று கூறுவது பொய்யான ஒன்று. அதிமுக, பாஜக கூட்டணி ஒரே படகில் பயணிக்கிறது. இந்தக் கூட்டணியிலிருந்து யார் விலகினாலும் பாஜக-அதிமுக கூட்டணி தொடரும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஆளுநருடன் அண்ணாமலை சந்திப்பு

ABOUT THE AUTHOR

...view details