நாமக்கல்லை அடுத்த முத்துகாபட்டி ஊராட்சியில் நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் சாலை விரிவாக்கப்பணிக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி, முத்துகாப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் அருள் ராஜேஷ் என்பவர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்தார்.
இது தொடர்பாக முத்துகாபட்டி ஊராட்சிக்குட்பட்ட மேதரமாதேவி காலனி கிழக்கு தெருவில், நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். பின்னர் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு செந்தமான நிலத்தை அப்பகுதியை சேர்ந்த தனபால் குடும்பத்தினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகக் கூறி, அதனை அகற்றச் சென்றனர். ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனபால் மற்றும் அவரது உறவினர்கள் பொக்லைன் இயந்திரத்தின் முன் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர்.