நேற்று முன்தினம் அம்பத்தூரில் திமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசினார். இதில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்தும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்தும் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, ஆர்.எஸ்.பாரதி மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி இன்று(பிப்.11) நாமக்கல் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் முரளி பாலுச்சாமி தலைமையில் 50க்கும் மேற்பட்ட அதிமுகவினர் நாமக்கல் காவல் கண்காணிப்பாளரிடம் இந்த புகார் மனுவை அளித்தனர்.