தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேந்தமங்கலம் அதிமுக எம்எல்ஏ சுயேச்சையாக வேட்புமனு - ADMK EX MLA file nomination news in Tamil

நாமக்கல்: சேந்தமங்கலம் பழங்குடியின தொகுதியில் அதிமுக எம்எல்ஏ சந்திரசேகரன் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல்செய்தார்.

ADMK EX MLA file nomination in Radhapuram
ADMK EX MLA file nomination in Radhapuram

By

Published : Mar 18, 2021, 4:44 PM IST

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பழங்குடியின தொகுதியில் 1996 முதல் 2001, 2016 முதல் 2021 வரை அதிமுக சட்டப்பேரவை உறுப்பினராகப் பணியாற்றியவர் சி. சந்திரசேகரன்.

இந்த முறை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு எஸ். சந்திரன் என்பவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து விரக்தியடைந்த சந்திரசேகரன் சுயேச்சையாகப் போட்டியிட முடிவுசெய்தார். இதற்காக சேந்தமங்கலம், கொல்லிமலையில் தனது ஆதரவாளர்களைச் சந்தித்து தனித்துப் போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடத்தினார்.

அதிமுக தரப்பில் இவருக்கு மிரட்டல் விடுத்துவந்த நிலையிலும், பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே இன்று அவர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர். ரமேஷிடம் மனு தாக்கல்செய்தார்.

சேந்தமங்கலம் அதிமுக எம்எல்ஏ சுயேச்சையாக வேட்புமனு!

முன்னதாக தனது உயிருக்குப் பாதுகாப்பு வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். இது குறித்து சந்திரசேகரன் கூறுகையில், “சுயேச்சையாகப் போட்டியிடும் என்னை அமைச்சர் தங்கமணி மறைமுகமாக மிரட்டினார். மேலும், கட்சியில் அடிமையாக உள்ளவருக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கி உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் சாலை மேம்பாட்டு ஒதுக்கிய 22 கோடி ரூபாய் நிதியை குமாரபாளையம் தொகுதிக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்ததைத் தட்டிக் கேட்டதால் அமைச்சர் எனக்கு சீட் வழங்கவில்லை” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க...ELECTION BREAKING: வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பு

ABOUT THE AUTHOR

...view details