தமிழகத்தில் மக்களவை-சட்டப்பேரவை இடைத்தேர்தல் வரும் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் பரப்புரை செய்ய இன்னும் 10 நாட்களே மீதமுள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் முன் ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்து இஸ்லாமியர்கள் பள்ளிவாசலில் இருந்து வெளியில் வரும்போது நாமக்கல் மக்களவை அதிமுக வேட்பாளர் காளியப்பனுக்கு வாக்களிக்கும்படி அக்கட்சியினர் கையெடுத்துக் கும்பிட்டு வாக்கு சேகரித்தனர்.