சென்னை: நாமக்கல் - துறையூர் செல்லும் சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற இந்தாண்டே முன்னுரிமை வழங்கி நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில், வினாக்கள் விடைகள் நேரத்தில், நாமக்கல் - துறையூர் செல்லும் சாலையையும், ஈரோடு - கரூர் இணைப்பு சாலையையும் நான்கு வழி சாலையாக அகலப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்குமா என சட்டமன்ற உறுப்பினர்கள் சேந்தமங்கலம் பொன்னுசாமி மற்றும் இளங்கோ ஆகியோர் கேள்வி எழுப்பினார்கள்
இதற்குப் பதிலளித்த பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, நாமக்கல்-துறையூர் செல்லும் சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற 14,250 PCU(passenger car unit) என்ற எண்ணிக்கை வேண்டும் என்றும், தற்போது அந்த சாலையில் 27,454 PCU(Passenger Car Unit) உள்ளதாகவும், சாலையை அகலப்படுத்துவதற்கான தேவை உள்ளதால், நாமக்கல் - துறையூர் சாலையை முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டே முன்னுரிமை வழங்கி, நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.
மேலும், ஈரோடு - கரூர் இணைப்பு சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற 4 மாதத்திற்கு முன்பாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் இந்தப் பகுதியைப் பார்வையிட்டதாகவும், ஈரோடு - கரூர் ஆகிய இரண்டு மாவட்டங்களை இணைக்கும் சாலையாக இருப்பதால் சாத்தியக் கூறுகள் குறித்து நெடுஞ்சாலைத்துறை செயலாளர் மற்றும் பொறியாளர்களுடன் ஆய்வு நடத்தப்பட்டதாகக் கூறினார்.
அதேபோல், சில இடங்களில் குறுகியதாகவும் சில இடங்கள் நான்கு வழிச்சாலை அமைப்பதற்கு ஏதுவான இடமாகவும் இருக்கிறது, நான்கு வழிச்சாலையாக மாற்றினால் வீடுகள் மற்றும் நிலம் கையெடுப்பு பிரச்னைகள் ஏற்படும் என்றும், இதனால் நீதிமன்றம் சென்று காலதாமதமாக வாய்ப்பு உள்ளதாகவும், இவற்றைக் கவனத்தில் எடுத்துக் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
நாமக்கல் - துறையூர் செல்லும் சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை: அமைச்சர் எ.வ.வேலு - What did Minister E v velu say in the assembly
நாமக்கல் - துறையூர் செல்லும் சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர்
![நாமக்கல் - துறையூர் செல்லும் சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை: அமைச்சர் எ.வ.வேலு Action to convert the Namakkal Thuraiyur road into a 4 lane road says Minister E V Velu](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/1200-675-18124375-thumbnail-16x9-thuraiyur.jpg)
Action to convert the Namakkal Thuraiyur road into a 4 lane road says Minister E V Velu