தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திடீரென ரத்து செய்யப்பட்ட ஆவின் தேர்வு! - namakkal news

நாமக்கல்: சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஆவின் எழுத்து தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனை அறியாமல் தேர்வு மையத்திற்கு சென்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

ஆவின் தேர்வு ரத்து
திடீரென ரத்து செய்யப்பட்ட ஆவின் தேர்வு

By

Published : Feb 28, 2021, 2:21 PM IST

தமிழகம் முழுவதும் ஆவின் நிறுவனத்தில் உள்ள துணை மேலாளர் காலி பணியிடங்களுக்கு இன்று (பிப்.28) காலையும், மதியமும் எழுத்துத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நாமக்கல் அடுத்த ரெட்டிபட்டி பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது.

சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக நேற்று (பிப்.27) மாலை ஆவின் நிர்வாகம் அறிவித்தது.

இதனை அறியாத தேர்வர்கள், தேர்வு மையத்திற்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பினர். தேர்வு ரத்து குறித்து அறிவிப்பு நேற்று (பிப்.27) காலையோ, மதியமோ தெரிவித்திருந்தால் தாங்கள் தேர்விற்கு வந்திருக்க மாட்டோம் என அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

இதையும் படிங்க: புதுச்சேரியில் குழந்தைகள், கர்ப்பிணிகளுக்குச் சத்துணவுத் தொகுப்பு வழங்கும் திட்டம்!

ABOUT THE AUTHOR

...view details