நாமக்கல்:பள்ளிபாளையம் அருகே உள்ள ஓடப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பாவாயி என்ற மூதாட்டி. இவர் கடந்த மார்ச் மாதம் கரும்பு காட்டில் கால்நடைகள் மேய்த்துக் கொண்டிருந்தபோது, பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். அத்துடன், அவர் அணிந்திருந்த 12 சவரன் தங்க நகைகளும் கொள்ளை போனது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த பள்ளிபாளையம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த சம்பவம் நடைபெற்ற பதட்டம் ஓய்வதற்குள் அடுத்த தினங்களுக்குள்ளாக மற்றொரு அதிர்ச்சியான சம்பவம் நடந்தது. கடந்த 12ஆம் தேதி பள்ளிபாளையம் அருகே உள்ள அண்ணாநகர் பகுதியில் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்த பழனியம்மாள் என்ற மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து தலையில் கல்லைப் போட்டு கொலை செய்ததுடன் அவர் அணிந்திருந்த தங்க நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
இதையும் படிங்க:ஆடு மேய்க்க சென்ற பெண் சடலமாக மீட்பு.. வட மாநில தொழிலாளர்கள் மீது புகார்.. நாமக்கல் போலீசார் விசாரணை!
இந்த இருகொலைகளும் ஒரே மாதிரியாக இருந்ததால் மாவட்ட காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் ராஜு தலைமையில், நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை காவல் துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் இன்று (மே 23) அதிகாலை பள்ளிபாளையம் எஸ்பிபி காலனி பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்து காவல் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.