நாமக்கல்லை அடுத்துள்ள பொட்டிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரை எருமப்பட்டி அடுத்துள்ள வரகூர் பகுதியைச் சேர்ந்த கட்டட தொழிலாளி மணிகண்டன் என்பவர் கடத்தி சென்றுவிட்டதாக சிறுமியின் பெற்றோர்கள் கடந்த மார்ச் மாதம் எருமப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: போக்சோவில் கைது! - நாமக்கல்லில் சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் கைது
நாமக்கல்: போட்டிரெட்டிப்பட்டி அருகே 17 வயது சிறுமியை கடத்தி சென்று மூன்று மாதங்களாக மறைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த கூலி தொழிலாளியை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
![சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: போக்சோவில் கைது! சிறுமியை கடத்திய நபர் கைது](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-08:24-tn-nmk-04-pocso-labour-arrested-script-vis-7205944-05062020201758-0506f-1591368478-1020.jpg)
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மணிகண்டனை தேடிவந்தனர். விசாரணையில் மணிகண்டன், கேரளாவிற்கு சிறுமியை கடத்தி சென்று அங்கேயே தங்க வைத்திருப்பது தெரியவந்தது.
பின்னர், கேரளா சென்று மணிகண்டனை கைது செய்த காவல் துறையினர், அவரிடம் நடத்திய விசாரணையில், மணிகண்டனுக்கு ஏற்கனவே திருமணமான நிலையில் சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச்சென்று தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து மணிகண்டன் மீது போக்சோ, ஆள் கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.