நாமக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தைச்சேர்ந்தவர்கள் சுரேஷ் (35) மற்றும் சுப்பிரமணி (50). இவர்கள் இருவரும் நேற்று நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரில் இருந்து திருச்செங்கோடு நோக்கி தங்களது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது புளியம்பட்டி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது இவர்கள் மீது, எதிரில் வந்த திருச்செங்கோடு நெய்க்காரப்பட்டி பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன்(29) மற்றும் அவரது மனைவி ஜீவிதா(21) அவர்கள் பயணித்த கார் மோதியது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த சுரேஷ், சுப்பிரமணி மற்றும் காரில் வந்த ராமகிருஷ்ணனின் மனைவி ஜீவிதா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ராமகிருஷ்ணன் பலத்த காயத்துடன் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதில் ஜீவிதாவுக்கும் ராமகிருஷ்ணனுக்கும் திருமணமாகி இரண்டு நாட்களே ஆனது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று இருவரும் காரில் கோயிலுக்குச் சென்றுகொண்டிருந்தபோது, நடந்த விபத்தால் ஜீவிதா உயிரிழந்தது அவர்களது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இருசக்கர வாகனத்தில் வந்த சுரேஷ் மற்றும் சுப்பிரமணி ஆகிய இருவரும் குடியை நிறுத்த வேண்டும் என தங்களது குல தெய்வ கோயிலுக்குச்சென்று கயிறு கட்டிவிட்டு வீடுதிரும்பும்போது விபத்தில் சிக்கி உயிரிழந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நாமக்கல் அருகே புளியம்பட்டி பகுதியில் கார் மற்றும் இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்... சப்பரத்தில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் உயிரிழப்பு...