நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்த அரூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜசேகரன் (36), பரமேஸ்வரி (30) தம்பதியினர். இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் மீண்டும் பரமேஸ்வரி கருவுற்றார்.
பிரசவ வலி
லாரி ஓட்டுநராகப் பணிபுரிந்துவரும் ராஜசேகரன் பணிநிமித்தமாக வெளிமாநிலம் சென்றுள்ளார். இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பரமேஸ்வரிக்கு இன்று அதிகாலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதனையறிந்த அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பரமேஸ்வரியை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.