தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பயமா.. எனக்கா.. 100 அடி கிணற்றில் டைவ் அடிக்கும் 85 வயது மூதாட்டி

தள்ளாத வயதிலும் கிணற்றில் டைவ் அடித்து ஊருக்கே நீச்சல் கற்றுதரும் 85 வயது பாட்டி ஒருவர் ஆச்சரியத்தை ஏற்படுத்திவருகிறார். இவர், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட தங்கசாலையில் வசித்து வருகிறார்.

பாப்பா
பாப்பா

By

Published : Nov 27, 2021, 7:41 PM IST

Updated : Nov 27, 2021, 10:03 PM IST

நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட தங்கசாலையில் வசித்து வருபவர் பாப்பா.

85 வயதான இவர், இந்தத் தள்ளாத வயதிலும் நூறு அடி கிணற்றில் டைவ் அடித்து நீச்சல் அடிக்கும் காட்சிகளை அந்தப் பகுதி மக்கள் பார்த்து வியந்து ரசித்து வருகின்றனர்.

100 அடி கிணற்றில் டைவ் அடிக்கும் 85 வயது மூதாட்டி

மேலும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அவரிடம் நீச்சல் கற்றுக் கொண்டு வருகிறார்கள். இது குறித்து மூதாட்டி பாப்பா கூறுகையில், “என்னுடைய அப்பாவிடமிருந்து அனைத்து வகை நீச்சலையும் நான் கற்றுக் கொண்டேன்.

இந்தத் தள்ளாத வயதிலும் இந்தக் கலையை இங்குள்ள இளைஞர்களுக்கு கற்றுத்தர வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு இளைஞர்களுக்கு நீச்சல் அடிக்க கற்று கொடுத்து வருகிறேன்.

முன்பு போல் அதிகமாக கற்றுத்தர முடியவில்லை, இந்த வயதில் என்னால் முடிந்தவரை இளைஞர்களுக்கும் பெரியோர்களுக்கும் நீச்சல் கற்று தந்து வருகின்றேன். என்னுடைய மகள், மகன் பேரன், பேத்தி, கொள்ளுப் பேரன் என அனைவருக்கும் கற்றுக் கொடுத்ததை பார்த்த இந்த பகுதிவாழ் மக்கள் தங்களுக்கு இந்த கலையை கற்றுக் கொடுக்க வற்புறுத்தினர்.

பயமா.. எனக்கா.. 100 அடி கிணற்றில் டைவ் அடிக்கும் 85 வயது மூதாட்டி

தற்போது இந்தக் கலையை கற்றுக் கொடுத்து வருகிறேன். நீச்சல் கலை என்பது அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு இந்த தள்ளாத வயதிலும் அனைவருக்கும் நீச்சல் கற்றுத் தருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

இது குறித்து அந்த பகுதி இளைஞர்கள் கூறுகையில், “நாங்கள் நீச்சல் அடிக்க கற்றுக் கொண்டதே இந்த பாட்டி மூலமாகத்தான்; இவ்வளவு வயது ஆனபோதிலும் நீச்சல் கலை மறக்காமல் உயரத்திலிருந்து குதித்து எங்களுக்கு குளிரையும் பொருட்படுத்தாமல் நீச்சல் பழகிய தருவார்கள்.
85 வயது நிறைவுபெறும் நிலையில் இந்த கலையை மறக்காமல் இந்த பகுதி இளைஞர்களுக்கு நீச்சல் சொல்லித் தருகிறார்கள்” என்றனர்.

இதையும் படிங்க : World Fishermen Day: உலக மீனவர் தினவிழா - நாகை அருகே களைகட்டிய மீனவர் நீச்சல் போட்டி

Last Updated : Nov 27, 2021, 10:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details