நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரத்தை அடுத்த அம்மாபாளையம் புதூரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், இன்று (டிச.28) காலை வழக்கம் போல் தோட்டத்திற்கு தனக்கு சொந்தமான 10 ஆடுகளை மேய்ச்சலுக்கு கூட்டிச் சென்றுள்ளார். தொடர்ந்து தன் ஆடுகளை வீட்டிற்குச் ஓட்டிச் சென்ற நிலையில், அங்கு வந்த ஆறுக்கும் மேற்ட்ட தெருநாய்கள் ஆடுகளை கழுத்து மற்றும் தொடையில் கடித்துவிட்டு தப்பியோடின.
தெருநாய்கள் கடித்து 7 ஆடுகள் பலி - நாமக்கல் செய்தி
நாமக்கல் : புதுச்சத்திரம் அடுத்துள்ள அம்மாபாளையம் புதூர் பகுதியில் தெருநாய்கள் கடித்து ஏழு ஆடுகள் உயிரிழந்தன.
இதில் ஏழு ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. இதேபோல், அதே பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கிருஷ்ணன், பெரியண்ணன் என்பவர்களுக்கு சொந்தமான ஆடுகளையும் நாய்கள் கடித்துள்ளன. இதில் ஆடுகள் படுகாயமடைந்தன. காயமடைந்த பிற ஆடுகளுக்கு மருத்துவர் சிகிச்சை அளித்துவருகிறார்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ”எங்கள் பகுதியில் 10க்கும் மேற்பட்ட வெறிநாய்கள் சுற்றித் திரிகின்றன. இவை வயல் பகுதிகளில் ஆடுகள் மற்றும் மாடுகள் மேய்ச்சலுக்கு செல்லும்போது கடித்துவிட்டுச் சென்றுவிடுகின்றன. இதனால் நாங்கள் வளர்க்கும் ஆடுகள் இறந்துபோகின்றன. இந்தச் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே இப்பகுதியில் சுற்றித்திரியும் வெறிநாய்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரிக்கை வைத்துள்ளார்.