கைத்தறி தொழிலை பாதுகாக்கவும் கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திடவும் 2015 ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் தேசிய கைத்தறி தினமாக மத்திய, மாநில அரசுகளால் கொண்டாடப்பட்டுவருகிறது. இந்நிலையில் இன்று 5ஆவது தேசிய கைத்தறி தினத்தை சிறப்பிக்கும் விதமாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கைத்தறி ஜவுளிகளின் கண்காட்சி தொடங்கியுள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன் கண்காட்சியை தொடங்கிவைத்தார்.
5ஆவது தேசிய கைத்தறி தினவிழா தொடக்கம்!
நாமக்கல்: மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கைத்தறி, துணிநூல் துறையின் சார்பில் 5ஆவது தேசிய கைத்தறி தின விழாவை முன்னிட்டு சிறப்பு கைத்தறி கண்காட்சி இன்று நடைபெற்றது.
இக்கண்காட்சியில், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்பட்ட கைத்தறி துண்டு ரகங்கள், வேட்டிகள், லுங்கிகள், பருத்தி சேலைகள், காட்டன் கோர்வை சேலைகள், ஜமுக்காளம், பெட்ஷீட்டுகள், அகர்லிக் சால்வைகள், பட்டு சேலைகள் ஆகியவைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
விற்பனை செய்ப்படும் கைத்தறி துணிகள் அனைத்திற்கும் 20 விழுக்காடு அரசு தள்ளுபடி வழங்கி விற்பனை செய்யப்படுகின்றது. மேலும் கைத்தறி தினத்தை முன்னிட்டு ஆட்சியர் அலுவலக அரசுத் துறை ஊழியர்கள் கைத்தறி உடையை அணிந்துவந்தனர்.