நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்த காளிப்பாளையத்தைச் சேர்ந்தவர் அஜித் (20). அவரது நண்பர்களான அதே ஊரைச் சேர்ந்த ஜெகதீஸ், செளந்தர்ராஜன், ராஜேஸ், பிரபு ஆகியோருடன் சேர்ந்து 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6ஆம் தேதி மது அருந்தியுள்ளார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் நான்கு பேரும் சேர்ந்து அஜித்தை கல்லால் அடித்து கொலைசெய்துள்ளனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த ஜேடர்பாளையம் காவல் துறையினர் நான்கு பேரையும் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு நாமக்கல் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.
இந்த நிலையில் இன்று (ஜன. 08) தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் ஜெகதீஸ், செளந்தர்ராஜன், ராஜேஸ், பிரபு ஆகிய நான்கு பேரும் குற்றவாளியென உறுதிசெய்ததோடு அவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி மோகன் தீர்ப்பளித்தார்.