நாமக்கல் மாவட்டம் வள்ளிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குமரவேல். இவர் குடும்பத்துடன் கடந்த 12ஆம் தேதி உறவினர் வீட்டுக்குச் சென்றார்.
பின்னர் மீண்டும் வீடு திரும்பிய அவருக்கு, கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 20 பவுன் தங்க நகை, வீட்டின் வெளியே நின்ற கார் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து குமரவேல் நல்லிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சிசிடிவி கேமரா காட்சியை ஆய்வு செய்தனர். அதில் மூன்று பேர் வீட்டிற்கு வந்து திருடியது பதிவாகியிருந்தது.