தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுவர் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழப்பு! - நாமக்கலில் பரிதாபம் - crime story

நாமக்கல்: சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

By

Published : Mar 4, 2021, 3:50 PM IST

நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் அடுத்த கணக்கன் தோட்டம் பகுதியில் வசிப்பவர் சின்னத்தம்பி. இவர் தனது மண் சுவர் வீட்டை பராமரிப்பு பணிக்காக சுவற்றை இடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதன் அருகில், பூங்கொடி(55). என்பவர் வசித்து வருகிறார். சின்னதம்பி தனது சுவற்றை இடித்து கொண்டியிருந்தார். அப்போது, பூங்கொடியும் அவரது 2 வயது பேத்தி தேவஸ்ரீயும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

இதையடுத்து, எதிர்பாராத விதமாக மண்சுவர் பூங்கொடி மற்றும் தேவஸ்ரீ மீது விழுந்ததில் அவர்கள் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் படுகாயமடைந்த சின்னத்தம்பியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், அங்கு பரிசோதித்த மருதுவர் சின்னதம்பி இறந்துவிட்டதாகக் கூறினார்.

இச்சம்பவம் குறித்து நல்லிபாளையம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த காவல் துறையினர் சம்பவம் இடதிற்கு சென்றனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details