நாமக்கல் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 110 ஆக இருந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது.
நேற்றைய கணக்கின்படி மாவட்டத்தில் ஆயிரத்து 20 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக குமாரபாளையம், பள்ளிபாளையம், பரமத்திவேலூர், இராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நோய்த்தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இப்பகுதிகளில் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு அப்பகுதியில் வசிப்பவர்கள் வெளியே செல்லாதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டு, அப்பகுதிகளில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டுள்ளது.