நாமக்கல் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் இரண்டாம் தேதியன்று நாமக்கல் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வள்ளிபுரம் என்ற இடத்தில் நாமக்கல் நகர காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமாக வந்த லாரியை சோதனை செய்ததில் 210 கிலோ கஞ்சா மூட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஆந்திராவிலிருந்து திண்டுக்கல்லுக்கு கஞ்சா கடத்தி சென்றது தெரியவந்தது, கஞ்சா கடத்திய தேனி மாவட்டத்தைச் சேர்ந்த லாரி உரிமையாளர் குமார், ஓட்டுனர் கிருஷ்ணபெருமாள் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்ததோடு கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியையும், அவர்களிடமிருந்து ரூ. 2 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.