நாமக்கல்:கரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக தமிழ்நாட்டில் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. சிலர் இதனைப் பயன்படுத்தி மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி பதுக்கி வைத்துக் கொண்டு கூடுதல் விலைக்கு மதுவை விற்பனை செய்தும், கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்தும் வருவதாக காவல்துறையினருக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், குமாரபாளையத்தில் வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சப்படுவதாக நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், திருச்செங்கோடு மதுவிலக்கு காவல்துறையினர், குமாரபாளையம் அருகே உள்ள ரங்கனூர் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.