நாமக்கல் மாவட்டத்தில் இன்று காலை 10 மணி முதல் 168 அரசு மதுபான கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது. மாவட்டத்தில் மதுபானம் வாங்க வருபவர்கள், பொருட்கள் வாங்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்ட வண்ண அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையையும் கொண்டு வந்தால் மட்டுமே ஒரு பாட்டில் (750 மி.லி) மது வழங்க வேண்டும் என ஆட்சியர் மெகராஜ் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர், நாமக்கல் நகராட்சிப் பகுதிகளில் செயல்பட்டு வரும் மதுபான கடைகளை இன்று ஆய்வு செய்தார். அப்போது சேலம் சாலையில் உள்ள தனியார் வங்கியின் மேல் மாடியில் செயல்படும் உயர்தர மதுபான கடை மற்றும் மதுபான கடை எண் 5911 ஆகியவற்றில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்ட அடையாள அட்டை இல்லாமலும் அளவுக்கு அதிகமாக மது வழங்கியதும் தெரிய வந்தது.