நாமக்கல் திருச்செங்கோட்டில் அரசு சார்பில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் அமைச்சர் தங்கமணி இன்று (நவ.27) கலந்துகொண்டார்.
பழைய பேருந்து நிலையம் அருகே அமைக்கப் பட்டுள்ள அம்மா இ-சேவை மையத்தை திறந்து வைத்த அவர் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அடையாள அட்டைகள், முதியோர் உதவித் தொகைக்கான ஆணைகள் ஆகியவற்றை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பேசிய அவர், “நிவர் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் 100 % மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை 95 % மின்இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. புயலால் 2,488 மின்கம்பங்கள் மற்றும் 108 மின்மாற்றிகள் சேதம் அடைந்துள்ளது. இதனால் மின்வாரியத்திற்கு 15 கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்துள்ளது.
நிவர் புயல் காரணமாக மின்துறையில் ரூபாய் 15 கோடி சேதம் - அமைச்சர் தங்கமணி சென்னையில் பெரும்பாக்கம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, பகுதிகளில் தண்ணீர் அதிகம் உள்ளது. வரும் காலங்களில் அந்த பகுதிகளிலும் முழுமையாக புதைவட மின்கம்பிகள் அமைக்கப்படும். நிவர் புயலை விட வேகமாக தமிழ்நாடு அரசு செயல்பட்டதால் பாதிப்புகள் குறைக்கப்பட்டன”என தெரிவித்தார்.
இதையும் படிங்க :விமானிக்கு திடீர் நெஞ்சு வலி: பயணிகள் அவதி!