தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாமக்கல்லில் 144 தடை மீறல் - 50க்கும் மேற்பட்ட மாணாக்கர்களை சேர்த்த ஆசிரியர் - நாமக்கல்லில் 144 தடை மீறல்

நாமக்கல்: 144 தடை உத்தரவை மீறி, 50க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் வழங்கியுள்ளார்.

நாமக்கல்லில் 144 தடை மீறல்
நாமக்கல்லில் 144 தடை மீறல்

By

Published : Jun 4, 2020, 11:02 PM IST

தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பின் காரணமாக அரசு 144 தடை உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மேலும் அரசு உத்தரவு வரும் வரை பள்ளி, கல்லூரிகளைத் திறக்கக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் அரசு உத்தரவை மீறி, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பேளுக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் ஜெயக்குமார் 50க்கும் மேற்பட்ட 11ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளை சீருடையில் வரச்சொல்லி, இலவச மிதிவண்டிகளை வழங்கியுள்ளார்.

மேலும் கரோனா தொற்று பரவ வாய்ப்பு உள்ள நிலையில் தலைமையாசிரியர், மாணவ மாணவிகளை ஒன்று சேர்த்தது பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details