நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த கோனேரிப்பட்டி - திருப்பதிநகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தமிழரசன். இவர் வெளிநாட்டில் வேலை செய்துவருகிறார். இவரது மனைவி சுகன்யா மற்றும் 3 குழந்தைகளுடன் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், சுகன்யா உறவினர் விட்டிற்குச் சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டின் கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சிடைந்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.