நாமக்கல்: புதுச்சத்திரம் அடுத்துள்ள கிழக்குகாட்டூர் கிராமத்தில், மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் இன்று வீடு வீடாகச் சென்று அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனரா என்று கேட்டறிந்தார்.
அப்போது அப்பகுதியில் வீட்டு வேலைகளைச் செய்துகொண்டிருந்த மூதாட்டியிடம் விசாரித்தபோது, அவர் அப்பகுதியைச் சேர்ந்த வள்ளியம்மாள் என்பதும், அவருக்கு வயது 101 என்பதும் தெரியவந்தது.
அவரிடம் பேச்சுகொடுத்த மாவட்ட ஆட்சியர், 'தடுப்பூசி போட்டுட்டீங்களா' என்று கேட்டதற்கு, அதற்கு தான் இரு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டதாகவும், தான் ஆரோக்கியமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
அவரையும், அவரது குடும்பத்தினரையும் மாவட்ட ஆட்சியர் பாராட்டினார். மேலும் இந்த வயதிலும், தனது வேலைகளையும் வீட்டின் வேலைகளும் செய்துகொண்டிருந்த மூதாட்டியை மாவட்ட ஆட்சியர் ஆச்சரியத்துடன் கண்டுசென்றார்.
இதையும் படிங்க:கட்டைப்பையில் வைத்து குழந்தையை கடத்திய பெண் கைது