நாமக்கல்: குமாரபாளையம் அருகே உள்ள பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீராம். இவர் குமாரபாளையம் அருகே உள்ள குப்பாண்டபாளையத்தில் இயங்கிவரும் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு கணித அறிவியல் பாடத்தில் தமிழ் வழியில் படித்துள்ளார்.
இவர் கடந்த மாதம் நடைபெற்ற 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினார். இன்று தமிழ்நாடு அரசால் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த மதிப்பெண் பட்டியலில் இவர் மாநிலத்திலேயே தமிழில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளார்.