தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 5, 2020, 1:22 PM IST

ETV Bharat / state

மாடுகள் திருட்டு: மாட்டிவிட்ட மூன்றாம் கண்!

நாகப்பட்டினம்: மயிலாடுதுறை அருகே கறவை மாடுகளை திருடிச் சென்ற இரண்டு பேரை காவல்துறையினர் சிசிடிவி காட்சி மூலம் கண்டறிந்து கைது செய்தனர்.

cow theft
cow theft

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகே நல்லத்துக்குடி கிராமத்தில் மீனாட்சி என்பவர் கறவைமாடுகள் வைத்துள்ளார். கடந்த 25ஆம் தேதி இரவு கொட்டகையில் கட்டி கிடந்த மாடுகள், காலையில் வந்து பார்த்த போது காணவில்லை. இதனால் மனவேதனையடைந்த மீனாட்சி, அர்ஜுனன் ஆகிய இருவரும் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் இச்சம்பவம் குறித்து புகாரளித்தனர்.

மாடு திருடுபோனது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் திருடர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சி பதிவுகளை ஆய்வு செய்தபோது, இரண்டு கறவை மாடுகளையும் லோடு ஆட்டோ மூலம் நீடாமங்கலம் கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த வசந்தகுமாருக்கு அனுப்பிவைத்தது தெரியவந்தது.

கறவை மாடுகளை திருடியவர்கள் கைது

இதனையடுத்து, தனிப்படை காவல்துறையினர் கடம்பூர் சென்று வசந்தகுமார் வீட்டில் கட்டிக்கிடந்த இரண்டு கறவை மாடுகளையும், கடத்தலுக்கு பயன்படுத்திய லோடு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். பின்னர், வசந்தகுமார்(29), மணிகண்டன்(38) ஆகிய இருவரையும் கைது செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:அண்ணா, எம்ஜிஆர் தடம்பதித்த வராக நதி: சூளுரைத்த ஓபிஆர்!

ABOUT THE AUTHOR

...view details