தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தோசை கேட்டு தராததால் சப்ளையர் காதை வெட்டிய இளைஞர்கள் - நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நாகப்பட்டினம்: தோசை கேட்டு தராததால் சப்ளையர் காதை வெட்டிய இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

இளைஞர்கள் கைது
இளைஞர்கள் கைது

By

Published : Apr 15, 2021, 8:21 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம் வெளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன். இவர் அதே பகுதியில் உணவகம் வைத்துள்ளார். இவரது கடைக்கு கர்ணன் படம் பார்த்துவிட்டு அருண்குமார், சப்பை சிவா என்ற இரண்டு இளைஞர்கள் சாப்பிட வந்தனர்.

அப்போது அருண்குமார் தோசை ஆர்டர் செய்ததாகவும், அந்த தோசையை சப்ளையர் வேறு ஒருவருக்கு வைத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் கடை ஊழியர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சப்ளையர் பாஸ்கரன் என்பவரது காதை கத்தியால் இளைஞர்கள் வெட்டினர்.

உடனே அவர் சிகிக்சைக்காக அரசு மருத்துவமனைக்கு சென்றார். தற்போது இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பட்டப்பகலில் இளைஞரை வெட்டும் கும்பல் - நெல்லையில் திக்... திக்...!

ABOUT THE AUTHOR

...view details