மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பாதுகாப்புபடை தலைமை காவலர் பக்கிரிசாமி(47) தீபாவளியையொட்டி நேற்று (அக்-25) இரவு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு கூச்சலிட்ட 4 இளைஞர்களை கண்டித்த போது தாக்கப்பட்டார். அவரது வாக்கிடாக்கியும் உடைக்கப்பட்டது. அதன்பின் அவர் போலீசாரிடம் புகார் கொடுத்தார்.
சிசிடிவி: ரயில்வே போலீஸை தாக்கிய இளைஞர்கள் - பாதுகாப்புபடை தலைமை காவலர் பக்கிரிசாமி
மயிலாடுதுறையில் பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புபடை போலீஸை தாக்கி வாக்கிடாக்கியை உடைத்து இளைஞர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
Etv Bharatரயில்வே பாதுகாப்பு படை போலீஸாரை தாக்கிய வாலிபர்கள் கைது
அதனடிப்படையில் மயிலாடுதுறை ஆற்றங்கரைத்தெரு கங்கை நகரை சேர்ந்த விஜய்(21), அஜித்குமார்(20), கிட்டப்பாத்தெருவை சேர்ந்த என்.விஜய்(22) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் பக்கிரிசாமி தாக்கப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:கோவை கார் வெடிப்பு: 5 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்