மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுகா அரங்கங்குடி பகுதியைச் சேர்ந்த ரகமத்நிஷா மகன் யூசுப்கான் (20). இவர் மன்னம்பந்தலில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு வணிகவியல் படித்து வந்துள்ளார்.
இவர் நேற்று (டிச.8) மாலை கல்லூரி முடிந்து இருசக்கர வாகனத்தில் மயிலாடுதுறை நோக்கிச் சென்றுள்ளார். அப்போது மூங்கில் தோட்டம் பகுதியில் பொறையாரில் இருந்து வந்த தனியார் பேருந்தை முந்தி செல்ல முயன்றுள்ளார்.
எதிர்பாராத விதமாக மாணவன் மீது பேருந்து இடித்ததில் அவர் நிலைதடுமாறி பின் சக்கரத்தில் விழுந்து உயிரிழந்தார். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மயிலாடுதுறை காவல் துறையினர் மாணவனின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தப்பியோடிய தனியார் பேருந்து ஓட்டுநர் , நடத்துநரைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:கரூரில் கல் குவாரி உரிமையாளர் கடத்திக்கொலை: குற்றவாளிகளை நெருங்கும் காவல் துறை