மயிலாடுதுறை அருகே குத்தாலம், பாரதி நகரில் பழைய இரும்பு வியாபாரக் கடையில் வேலை பார்த்து வருபவர் முரளி (33). நேற்றிரவு தனது மனைவி திவ்யாவிடம் சண்டை போட்டு மது குடிக்க பணம் வாங்கிக்கொண்டு சென்றவர் காலை வரை வீடு திரும்பவில்லை. இந்நிலையில் இன்று காலை பைரவா நகர் பகுதியில் முரளி, மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக தகவல் வந்தது. மதுபாட்டிலால் வயிறு, இடுப்பு, நெற்றி ஆகிய இடங்களில் குத்துப்பட்டு அவர் இறந்துள்ளார்.
மதுபாட்டிலால் குத்தப்பட்டு இளைஞர் கொலை - mayiladudurai
நாகை : மயிலாடுதுறை அருகே மதுபாட்டிலால் இளைஞர் குத்தி கொலை செய்யப்பட்டதையடுத்து, கொலையாளியை காவல் துறையினர் தேடிவருகின்றனர்
மதுபாட்டிலால் குத்தப்பட்டு இளைஞர் கொலை
திவ்யா அளித்த புகாரின் அடிப்படையில், அங்கு வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து , காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.