நாகை நடராஜபிள்ளை தெருவைச் சேர்ந்தவர் இளைஞர் அருண். இவர் மீது நாகை நகர காவல்நிலையத்தில் சாராயம் கடத்தல், பிக்பாக்கெட், செயின் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், வழக்கு ஒன்றில் ஆஜராக நாகை நீதிமன்றத்திற்கு தனது நண்பர்களான ராபர்ட், மாதவன் ஆகியோருடன் வந்துள்ளார்.
மதுபோதையில் நண்பரைக் கொன்ற இருவர் கைது
நாகை: மதுபோதையின் போது ஏற்பட்ட தகராறில் நண்பரை வெட்டிக்கொன்ற இரண்டு இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
அதனை தொடர்ந்து நாகை அக்கரைகுளம் அருகேயுள்ள பாழடைந்த வீட்டில், மூவரும் கஞ்சா, மது உள்ளிட்டவைகளை அருந்தியுள்ளனர். அப்போது, போதை தலைக்கேறிய நிலையில் மூவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பின் தகராறாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராபர்ட், மாதவன் ஆகியோர் அருணை கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் முகம், பின் கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் வெட்டுபட்டு ரத்தவெள்ளத்தில் மிதந்த அருண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் அருண் இறந்து கிடப்பது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகை நகர காவல் துறையினர் தப்பிச்செல்ல முயன்ற ராபர்ட், மாதவன் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அருணின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.