மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்துள்ள ராதாநல்லூரில் நாகப்பட்டினம் மாவட்ட திமுக பொறுப்பாளரும், பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினருமான நிவேதா முருகனுக்குச் சொந்தமான செங்கல் சூளை இயங்கிவருகிறது. இந்த சூளையிலிருந்து செங்கல்களை லாரிகளில் எடுத்து ராதாநல்லூர் கிராம சாலை வழியாக எடுத்துச் செல்வது வழக்கம்.
இந்தநிலையில், இன்று (மே.8) சூளையிலிருந்து செங்கல் ஏற்றி அதிவேகமாக லாரி வந்துக்கொண்டிருந்தது. அப்போது எதிரே இருச்சக்கர வாகனத்தில் வந்த ராதாநல்லூரைச் சேரந்த விஷ்ணு (22) என்ற இளைஞர் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விஷ்ணு சம்பவ இடத்திலேயே பலியானார்.