தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமாவளவன் தலைக்கு விலை வைத்து டிக்டாக் காணொலி - இளைஞர் கைது! - திருமாவளவன் டிக்டாக்

சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினரும், விசிக கட்சியின் தலைவருமான திருமாவளவன் தலைக்கு விலை வைத்து இளைஞர் ஒருவர் வெளியிட்ட டிக்டாக் காணொலி இணையத்தை ஆக்கிரமித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

tirumavalavan tiktok isuue
tirumavalavan tiktok isuue

By

Published : Jul 7, 2020, 4:04 PM IST

நாகப்பட்டினம்: திருமாவளவன் தலைக்கு விலை வைத்து டிக்டாக் வெளியிட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சீர்காழியை அடுத்த தேனூர் பகுதியைச் சேர்ந்த கவியரசன் என்பவர் சில நாட்களுக்கு முன்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் குறித்து, அவதூறாக கருத்து தெரிவித்து டிக் - டாக்கில் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிபிஇ பாதுகாப்பு உடையுடன் நகைக்கடையில் கொள்ளை!

அதில் திருமாவளவன் புகைப்படத்தை கையில் வைத்துக் கொண்டு, அவரது தலையை எடுப்பவர்களுக்கு "லைப் செட்டில்மெண்ட்" என படத்தில் வரும் வசனத்தை டிக் - டாக்காக வெளியிட்டுள்ளார்.

டிக்-டாக்கில் வலம் வரும் சர்ச்சைக்குரிய காணொலி...!

இந்த காணொலியைப் பார்த்த விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த மாவட்ட உறுப்பினர்கள் கூட்டாக சீர்காழி காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சீர்காழி காவல் துறையினர் கவியரசனை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details