தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆற்றில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு - youth died in nagapattinam

நாகப்பட்டினம்: தரங்கம்பாடி அருகே வெளியூரிலிருந்து ஆற்றில் குளிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாலிபர் நீரில் மூழ்கி பலி
வாலிபர் நீரில் மூழ்கி பலி

By

Published : Jan 4, 2021, 5:53 PM IST

Updated : Jan 4, 2021, 6:32 PM IST

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா எருக்கட்டாஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் பரமகுரு. இவர் சீயக்காய் பொடி தயாரிக்கும் குடிசைத் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று(ஜன.03) மயிலாடுதுறை அருகே தலைஞாயிறு பகுதியில் குடிசை தொழில் பற்றி நடைபெற்ற பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டார். இவர் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட தனது வெளியூர் நண்பர்கள் கிருஷ்ணன் (36), திவ்யா(22), பிரவீன் (24) ஆகியோரை விருந்தினர்களாக அவர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

இந்நிலையில் வெளியூரிலிருந்து வந்த மூவரும் இன்று(ஜன.04) ஊரைச் சுற்றிப் பார்க்கச் சென்றுள்ளனர். அப்போது அனந்தமங்கலம் மகி மலையாறு சட்ரஸ் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் திவ்யாவைக் கரையில் நிற்க வைத்துவிட்டு பிரவீன் மற்றும் கிருஷ்ணன் ஆற்றில் இறங்கி குளித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் தண்ணீரில் மூழ்கியுள்ளனர்.

இதனைக் கண்டு அச்சமடைந்த திவ்யா உடனே கூச்சலிட்டுள்ளார். ஆனால் அவர் அழைத்தது யாருக்கும் கேட்காததால், கிராமத்திற்குள் ஓடிசென்று சம்பவம் குறித்து பொதுமக்களிடம் கூறி உதவி கேட்டுள்ளார்.

இதனையடுத்து கிராம மக்கள் விரைந்து சென்று ஆற்றில் மூழ்கிய இரு வாலிபர்களையும் மீட்க முயன்றனர். முயற்சி பலனளிக்காத நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொறையார் காவல் துறையினர், தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரில் மூழ்கிய 2 நபர்களையும் தேடினர்.

இதில் பிரவீன் சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து கிருஷ்ணன் உடலை தேடும் பணியில் காவல் துறையினரும், தீயணைப்பு படை வீரர்களும் ஈடுபட்டுள்ளனர்.

Last Updated : Jan 4, 2021, 6:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details