மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, கிடாரங்கொண்டான் திருமேனியார்கோயிலைச் சேர்ந்தவர் ஆகாஷ் (22). இவர் தனது வீட்டின் அருகே 8ஆம் வகுப்பு படித்து வரும் 14 வயது சிறுமியை கடத்திச் சென்றதாக அச்சிறுமியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முன்னதாக புகார் அளித்தனர்.
14 வயது சிறுமியை கடத்திய இளைஞர் போக்சோவில் கைது - இளைஞர் கைது
மயிலாடுதுறை: சிறுமியை கடத்திச் சென்ற இளைஞரை அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோவில் கைது செய்தனர்.
arrest
இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த காவல் துறையினர், முன்னதாக சிறுமியை மீட்டனர். தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் ஆகாஷ் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: போக்சோவில் இருவர் கைது!